
பூட்டிய வீட்டில் சடலமாக கிடந்த நடிகர் பிரதீப் கே விஜயன்
சென்னை பாலவாக்கத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களாக இவரது நண்பர்கள் இவரை அலைப்பேசியில் அழைத்துள்ளனர். ஆனால் அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் வீட்டிற்கு வந்து அவரது நண்பர்கள் பார்த்தபோது வீடு உள்புறமாக பூட்டியிருந்தது. இதையடுத்து போலீசாரின் உதவியோடு உள்ளே சென்று பார்த்தபோது பிரதீப் இறந்து கிடந்தார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. உடலில் அவருக்கு பிரச்னை எதுவும் இருந்ததா, மருந்து எதுவும் எடுத்து வந்தாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இறந்த பிரதீப்பின் உடன் பிரேத பரிசோதனைக்காக சென்னை, ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரதீப்பின் திடீர் மறைவு, அதுவும் அவர் இறந்தது கூட தெரியாமல் இரண்டு நாட்கள் கடந்தது சினிமா பிரபலங்கள் இடையே கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. திரைப்பிரபலங்களும், அவருடன் பணியாற்றியவர்களும் வலைதளங்களில் இரங்கல் பதிவிட்டுள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!