
கல்கி டிரைலர் வெளியீடு : ஒரு நொடி வெளியான கமலின் தோற்றம்
இந்த நிலையில் படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இயக்குநர் நாக் அஸ்வின் முன்பு சொன்னது போலவே கதை மகாபாரதக் காலத்தில் இருந்து துவங்குகிறது. தீபிகா, அமிதாப்பின் தோற்றங்கள் மிரட்டுகிறது. இதுதவிர ஹாலிவுட் படங்களில் இருக்கும் டெக்னாலஜி இந்த படத்திலும் தெரிகிறது. பிரபாஸின் ஆக் ஷன், அவரின் தோற்றம், புஜ்ஜி கார் என மிரட்டலாக உள்ளது.
டிரைலரின் இறுதியில் வில்லனாக கமலின் என்ட்ரி மாஸ் கூட்டுகிறது. கமலின் முகத்தோற்றம் ஒரு விநாடி இடம் பெறுகிறது. அதோடு “பயப்படாதே... புது பிரபஞ்சம் வந்துகிட்டு இருக்கு” என்கிறார் கமல்.
ஹாலிவுட் தரத்தில் டிரைலர் இருந்தாலும் அதிலும் குறைகள் கண்டுபிடித்து நெட்டிசன்கள் பகிர்ந்து வருகிறார்கள். இரண்டு பாகங்களாக வெளிவரும் கல்கி படத்தின் முதல் பாகத்தில் கமலின் பகுதி குறைவாகவே வருகிறது. இரண்டாம் பகுதியில் தான் அவரின் காட்சிகள் அதிகம் உள்ளது என்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!