
முக்கிய எதிரிகள் இல்லாமல் வரும் மகாராஜா
இந்த வாரம் ஜூன் 14ம் தேதி வெள்ளிக்கிழமை விஜய் சேதுபதியின் 50வது படமான "மகாராஜா" படம் வருகிறது. போட்டிக்கு முக்கிய எதிரிகள் என யாரையும் சொல்ல முடியாதபடி ஓரிரு படங்கள் மட்டுமே இந்த வாரம் வெளியாகும் எனத் தெரிகிறது.
நேற்று திருமணமான உமாபதி கதாநாயகனாக நடித்துள்ள "பித்தல மாத்தி" படம் ஜூன் 14 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு இந்த இரண்டு படங்கள்தான் அன்றைய தினம் வெளியாக உள்ளன. பெரிய போட்டி எதுவும் இல்லாத காரணத்தால் "மகாராஜா" படத்திற்கு வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
அதனால்தான், படம் நன்றாக இருக்கிறது என இப்போதே படம் பற்றி ஒரு பில்ட்-அப்பை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!