
‛‛மோடியின் அமைச்சரவையில் இருப்பது பெருமை : வதந்தி குறித்து சுரேஷ் கோபி விளக்கம்
மலையாள சினிமாவின் பிரபல நடிகர் சுரேஷ் கோபி. பா.ஜ., கட்சியில் உள்ள இவர் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கேரள மாநிலம், திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு கேரளாவில் பா.ஜ.வின் முதல் லோக்சபா எம்.பி.,யாகவும் தேர்வானார். நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சர்கள் 71 பேர் பதவியேற்றனர். இதில் சுரேஷ் கோபியும் அமைச்சராக பொறுப்பேற்றார்.
ஆனால், "திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க இருப்பதால் எனக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டாம். என்னை அமைச்சரவையில் இருந்து விடுவிப்பார்கள் என நம்புகிறேன்" என்று சுரேஷ் கோபி தெரிவித்ததாக செய்தி பரவியது.
இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த சுரேஷ்கோபி, அவரது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டதாவது : மோடி அரசின் அமைச்சரவையில் இருந்து நான் விலகப் போவதாக சில ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பி வருகின்றன. இது முற்றிலும் தவறானது. மோடி அரசின் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பதும், கேரள மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதும் எனக்கு பெருமை. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், கேரளாவின் வளர்ச்சிக்கு பாடுபட உறுதி பூண்டுள்ளேன் என விளக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!