
ராமோஜி ராவ் மறைவு : ரஜினி, கமல் இரங்கல்
ரஜினி இரங்கல்
நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவில், ‛‛எனது வழிகாட்டியும், நலம் விரும்பியுமான ஸ்ரீ ராமோஜி ராவ் மறைவை கேட்டு வருத்தம் அடைந்தேன். பத்திரிக்கை, அரசியல், சினிமா போன்றவற்றில் கிங் மேக்கராக இருந்தார். அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்"" என குறிப்பிட்டுள்ளார்.
கமல் இரங்கல்
எக்ஸ் தளத்தில் நடிகர் கமல் வெளியிட்ட இரங்கல் பதிவில், ‛‛இந்திய ஊடகம் மற்றும் சினிமா துறையின் முன்னோடியும், ஈ நாடு குழுமத்தின் தலைவருமான ராமோஜி ராவ்-வின் மறைவு வருத்தம் அளிக்கிறது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டி அவரது நினைவாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு படப்பிடிப்பு இடம் மட்டுமல்ல, பிரபலமான சுற்றுலா தலமாகவும் உள்ளது. தொலைநோக்கு மற்றும் புதுமையான சிந்தனையாளரின் மறைவு இந்திய சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் எனது இரங்கல்கள்"" என குறிப்பிட்டுள்ளார்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!