
25வது நாளில் ஸ்டார்
இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சுமாரான வரவேற்பைப் பெற்றது. இதுவரையில், சுமார் 20 கோடி வரை இப்படம் வசூலித்துள்ளதாகத் தகவல். இன்றுடன் இப்படம் வெளிவந்து 25 நாட்களாகிறது.
இந்தக் காலத்தில் ஒரு படம் 25 நாட்களைக் கடந்து ஓடுவது அபூர்வமான விஷயமாக உள்ளது. இந்த வருடத்தில் இதுவரையில், ““அயலான், மிஷன் சாப்டர் 1, ப்ளூ ஸ்டார், சிங்கப்பூர் சலூன், தூக்குதுரை, வடக்குபட்டி ராமசாமி, லவ்வர், சைரன், அரண்மனை 4” ஆகிய படங்கள் 25 நாட்களைக் கடந்து ஓடியுள்ளன. அந்த வரிசையில் தற்போது "ஸ்டார்" படமும் இணைந்துள்ளது.
“டாடா, ஸ்டார்"" என குறிப்பிடத்தக்க வெற்றியைக் கொடுத்த கவின் தற்போது நான்கைந்து படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!