
பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் தங்கப்பதக்கம்
இந்த படத்தின் கதையை எழுதியவர் இயக்குனர் மகேந்திரன். தங்கப்பதக்கம் உருவான கதை தனியானது. சோவின் "துக்ளக்" பத்திரிக்கையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் மகேந்திரன். நிறைய பத்திரிகை படிக்கும் வழக்கம் கொண்ட மகேந்திரன் அதற்காகவே அங்கு வேலை செய்தார். ஒரு நாள் ஒரு ஆங்கில படத்தின் விளம்பரத்தை பார்த்தார். அதில் ஒரு போலீஸ் அதிகாரி தன் மகனை சுடுவது போன்ற படம் இடம் பெற்றிருந்தது. அப்போது அவர் மனதில் "தங்கப்பதக்கம்" படத்தின் ஒன்லைன் உருவானது.
ஒரு நாள் சோவிடம் நாடகத்திற்காக ஒரு கதை கேட்பதற்காக துக்ளக் அலுவலுத்திற்கு நடிகர் செந்தாமரை வந்தார். அப்போது சோ அலுவலத்தில் இல்லாததால் அங்கிருந்த மகேந்திரனிடம் இதை சொல்லி உள்ளார். அப்போது மகேந்திரன் தன்னிடம் இருந்த "தங்கப்பதக்கம்" ஒன் லைனை கூறியுள்ளார். நேர்மையான போலீஸ் அதிகாரிக்கு பெரிய குற்றங்களை செய்யும் மகன். இருவருக்குமான சட்ட போராட்டமும், பாச போராட்டமும்தான் ஒன்லைன் என்றார்.
இது அவருக்கு பிடித்துக்போகவே மகேந்திரனுக்கு தனி அறை ஒதுக்கி கொடுத்து அந்த ஒன் லைனுக்கு திரைக்கதை எழுத வைத்தனர். பின்னர் அந்த கதையை நாடகமாக்கி எஸ்.பி.சவுத்ரியாக செந்தாமரை நடித்து வந்தார். இந்த நாடகத்தை பார்த்த சிவாஜி அதை திரைப்படமாக்கி எஸ்.பி.சவுத்ரி வேடத்தில் நடித்தார். காலத்தால் அழியாத காவியமாக அது உருவானது.
1974ம் ஆண்டு இதே ஜூன் 1ம் தேதி வெளியான தங்கப்பதக்கத்திற்கு இது பொன்விழா ஆண்டு.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!