
பிரேம்ஜி அமரனுக்கு டும் டும் : பேச்சிலர் லைப்புக்கு ‛பை பை
45 வயதை கடந்த பிரேம்ஜி திருமணம் செய்யாமலே இருந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு திருமணம் முடிவாகி உள்ளது. சேலத்தை சேர்ந்த மணிமாறன் - ஷர்மிளா தம்பதியரின் மகள் இந்துவை திருமணம் செய்ய இருக்கிறார். வருகிற ஜூன் 9ம் தேதி, திருத்தணி முருகன் கோயிலில் இவர்களின் திருமணம் நடைபெற இருக்கிறது. இதுதொடர்பான திருமண பத்திரிக்கை ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது. இது காதல் திருமணம் என்கிறார்கள்.
எப்படியோ பேச்சிலர் வாழ்க்கைக்கு ‛பை பை" சொல்லியிருக்கிறார் பிரேம்ஜி அமரன்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!