
ஒரே நாளில் யுவனின் தமிழ், தெலுங்கு படங்கள் ரிலீஸ்
பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டும்தான் இசையமைப்பேன் என்று மற்ற இசையமைப்பாளர்கள் போல அவர் இருப்பதில்லை. புதுமுகங்களின் படங்களுக்கும், வளரும் நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்துக் கொடுப்பவர்.
சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள இன்று வெளியாகும் "கருடன்" படத்திற்கு இசையமைத்துள்ளார். அதே போல தெலுங்கில் விஷ்வன் சென் நடித்து இன்று வெளியாகும் "கேங்ஸ் ஆப் கோதாவரி" படத்திற்கும் இசையமைத்துள்ளார். இந்த இரண்டு படங்களுக்கம் இடையே ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டு படங்களுமே கிராமத்தை மையப்படுத்திய ஆக்ஷன் கதைகள்.
இரண்டு படங்களின் டிரைலர்களையும் ரசிகர்கள் திரும்பிப் பார்க்க வைத்ததில் யுவனின் பங்கு உண்டு. இரண்டு படங்களின் பின்னணி இசையும் இப்படத்திற்கு பலமாக அமைந்துள்ளது என படக்குழுவினர் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்கள்.
யுவனின் அடுத்த பெரிய வெளியீடாக விஜய் நடிக்கும் "தி கோட்" பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!