
சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய கவின்
இது தவிர மேலும் சில படங்களில் நடிக்க அவரிடம் பேசி வருகிறார்கள். ஆனால், கவின் தற்போது தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்திவிட்டாராம். சுமார் 8 கோடி வரை அவர் சம்பளம் கேட்கிறார் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
அவர் கதாநாயகனாக நடித்து இதுவரையில் ஒரே ஒரு படம் மட்டும்தான் லாபத்தைக் கொடுத்துள்ளது. அதற்குள் இப்படி சம்பளத்தை உயர்த்தினால் எப்படி என விமர்சனங்கள் எழுந்துள்ளதாம். நெல்சன், வெற்றி மாறன் தயாரிக்கும் படங்களில் நடிப்பதால்தான் இப்படி ஏற்றிவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.
ஒரேயடியாக சம்பளத்தை உயர்த்தி பின் காணாமல் போன நடிகர்களைப் பற்றியும் கவின் யோசித்துப் பார்க்க வேண்டும் என சில அனுபவஸ்தர்கள் பேசிக் கொள்கிறார்களாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!