
இந்தியன் 2 இசை வெளியீடு : தவிர்க்கும் ரஜினிகாந்த்?
ஆனால், தற்போது அந்த விழாவில் கலந்து கொள்வதை ரஜினிகாந்த் தவிர்க்க முடிவு செய்துள்ளார் என்று சொல்கிறார்கள். "இந்தியன் 2" படத்தின் கதாநாயகன் கமல்ஹாசன். அதனால், அன்று அரங்கம் முழுவதும் அவருடைய ரசிகர்கள்தான் இருப்பார்கள். தான் அதில் வந்து கலந்து கொண்டால் அது வேறு விதமாகவும் போகலாம். எனவே, வரவில்லை என ரஜினி சொல்லிவிட்டதாகத் தகவல்.
சமீபகாலமாக ரஜினி, கமல் இருவரது ரசிகர்களுக்கிடையே சமூக வலைத்தளங்களில் அதிக மோதல் ஏற்படுகிறது. தேவையற்ற சர்ச்சை எதுவும் வேண்டாம் என்பதாலேயே ரஜினிகாந்த் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்கிறார்கள்.
இருந்தாலும் தயாரிப்பு நிறுவனங்கள், இயக்குனர் ஷங்கர் தரப்பில் ஏதாவது அழுத்தம் கொடுத்தால் ரஜினி தனது முடிவை மறுபரிசீலனை செய்யவும் வாய்ப்புண்டு.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!