
ஓராண்டாக நடந்த அமரன் படப்பிடிப்பு நிறைவு : விரைவில் ரிலீஸ் அறிவிப்பு
ஓராண்டாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “கடைசி பிரேம் மற்றும் துப்பாக்கி சல்யூட்டுக்கான நேரம்” என சிறு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்கள்.
கடந்த வருடம் மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் ஆரம்பமானது. அதிக நாட்கள் படப்பிடிப்பு அங்குதான் நடைபெற்றது. சுமார் 75 நாட்கள் வரை நடைபெற்றுள்ளது. சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்த வருடம் பிப்ரவரி மாதம் இப்படத்தின் தலைப்பை "அமரன்" என அறிவித்தார்கள்.
படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால் விரைவில் படம் ரிலீஸ் அறிவிப்பு வெளியாகலாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!