
பெங்களூரு போதை பார்ட்டி : நடிகை ஹேமா உள்ளிட்ட 86 பேர் சோதனை பாசிட்டிவ்
தெலுங்கு மற்றும் கன்னடத் திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள், மாடல்கள் உள்ளிட்ட சில பிரபலங்கள் அந்த பார்ட்டியில் கலந்து கொண்டனர். தெலுங்கு நடிகை ஹேமா, நடிகர் ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் ஜானி ஆகியோரது பெயர்கள் அதில் அடிபட்டன. ஸ்ரீகாந்த், ஜானி, ஹேமா ஆகியோர் உடனடியாக மறுப்பு அறிக்கையை வெளியிட்டனர்.
இந்நிலையில் அந்த பார்ட்டியில் கலந்து கொண்ட 73 ஆண்கள் மற்றும் 30 பெண்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அவற்றில் 59 ஆண்கள், 27 பெண்கள் ஆகியோரது சோதனை பாசிட்டிவ்வாக வந்துள்ளது. இதன் மூலம் அவர்கள் மீதும் வழக்கு பாயும் எனத் தெரிகிறது.
போதை பார்ட்டி நடந்த இடத்திலிருந்து 14.4 கிராம் எம்டிஎம்எ போதை மாத்திரைகள், 1.16 கிராம் எம்டிஎம்எ படிகங்கள், 6 கிராம் ஹைட்ரோ கஞ்சா, 5 கிராம் கோக்கைன், கோக்கைன் தடவப்பட்ட 500 ரூபாய் நோட்டுகள், 5 மொபைல் போன்கள், ஒரு வோக்ஸ்வோகன் கார், ஒரு லேண்ட் ரோவர் கார், டிஜே பயன்படுத்தும் ஆடியோ சாதனங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!