
கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட கல்லூரி மாணவர்கள் சாதனை
மைசூரை சேர்ந்த சித்தானந்த் எஸ்.நாயக் இயக்கத்தில் உருவான "சன்பிளவர்" என்ற குறும்படம் முதல் பரிசை பெற்றுள்ளது. 16 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படத்தை புனேவை சேர்ந்த திரைப்பட கல்லூரி மாணவர்கள் தயாரித்து இருந்தனர். திருட்டுப்போன சேவலை மையமாக வைத்து உருவாகி இருந்தது.
இதேபோல மீரட்டை சேர்ந்த மான்சி மகேஸ்வரி என்ற மாணவி இயக்கிய "பன்னி ஹூட்" என்ற குறும்படம் மூன்றாம் பரிசை பெற்றது. கிராமிய கலைஞரான ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. தற்போது இவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!