
தக் லைப்பில் அதிரடி நடனத்திற்கு தயாராகும் த்ரிஷா
இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் த்ரிஷா சம்பந்தப்பட்ட பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது. இந்த பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்து வருகிறார். படப்பிடிப்பிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள த்ரிஷா, “கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற ரிகர்சலின் போது என்னை ஒரு பாம்பாகவே உணர வைத்து விட்டார்கள். அதுமட்டுமல்ல இடைவிடாத சிரிப்பும் வேலையில் கவனமுமாக படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!