
சர்ச்சையை ஏற்படுத்திய பெங்களூரூ போதை பார்ட்டி
ஞாயிறு இரவு ஆரம்பமாகி திங்கள் அதிகாலை வரையில் அந்த பார்ட்டி நடந்துள்ளது. பார்ட்டியை நடத்தியவர், மற்றும் போதைப் பொருள் கடத்திய மூவர், மேலும் ஐந்து பேர் என சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அந்த இடத்திலிருந்து போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தெலுங்குத் திரையுலகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை ஹேமா மற்றும் "பீஸ்ட், வாரிசு, ஜெயிலர்" படங்களில் நடன இயக்குனராகப் பணியாற்றி ஜானி மாஸ்டர் ஆகியோர் கலந்து கொண்டதாக செய்திகள் பரவியது. மூவருமே தனித்தனியாக அது குறித்து மறுப்பும் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கு, கன்னடத் திரையுலகங்களில் கடந்த சில வருடங்களாக போதைப் பொருள் பார்ட்டிகள் நடந்த விவகாரம் இன்னும் விசாரணையில் உள்ளது. சில முன்னணி நடிகர்கள் ஐதராபாத்தில் நடந்த விசாரணையில் ஆஜராகி விளக்கமளித்தனர்.
இந்நிலையில் நேற்றைய பார்ட்டி விவகாரம் மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!