
வெற்றிக் கோட்டைத் தொடுவாரா பி.டி. சார்
கதாநாயகனாக கடந்த ஐந்து வருடங்களாகவே அடுத்த வெற்றிக்காகப் போராடி வருகிறார் ஆதி. அவர் தற்போது நாயகனாக நடித்துள்ள "பி.டி சார்" படம் இந்த வாரம் மே 24ம் தேதி வெளியாகிறது. ஒரு ஆக்ஷன் படமாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த "பி.டி சார்" படம் மூலம் ஆதி வெற்றிக் கோட்டை தொடுவார் என்ற நம்பிக்கை படக்குழுவிற்கு உள்ளது.
இந்த வாரம் இப்படத்துடன் மே 24ல், “பகலறியான், பூமரக் காத்து, 6 கண்களும் ஒரே பார்வை” ஆகிய படங்களும் மே 23ல் "சாமானியன்" படமும் வெளியாக உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!