
அஅஅ - குட் பேட் அக்லி முதல் பார்வை : என்ன வித்தியாசம் ?
படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடிக்கிறாரா அல்லது பேன்டஸி ஆக மூன்று விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறாரா என்பது தற்போதைக்கு சஸ்பென்ஸ் ஆக உள்ளது.
"குட் பேட் அக்லி" படத்தின் முதல் போஸ்டருக்கும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த "அன்பானவன் அசராதவன் அடங்காதவன்" பட போஸ்டருக்கும் இருக்கும் வித்தியாசம் ஹெல்மெட் மட்டுமே. இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரில் ஹெல்மெட் அணிந்த மூன்று சிம்பு (?) இருந்தார்கள். "குட் பேட் அக்லி" போஸ்டரில் முகத்தை மறைக்காமல் மூன்று அஜித் (?) இருக்கிறார்கள்.மேலும், இப்போஸ்டருக்கான கலர் டோன் எல்லாம் "மார்க் ஆண்டனி" ஸ்டைலிலேயே உள்ளது.
"குட் பேட் அக்லி" படம் "அஅஅ" மாதிரி இருக்கப் போகிறதா, "மார்க் ஆண்டனி" மாதிரி இருக்கப் போகிறதா என்பதைத் தெரிந்து கொள்ள 2025 பொங்கல் வரை காத்திருக்க வேண்டும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!