
வீர தீர சூரன் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு
ஆலங்குளம் ஊரில் உள்ள காய்கறி மார்க்கெட் ஒன்றில் கடைசி நாள் படப்பிடிப்பு நடைபெற்றது. அதற்காக சென்ற வீடியோ ஒன்றை விக்ரம் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். கூடியுள்ள ரசிகர்கள் கூட்டம் விக்ரமிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தது. அவர்களுக்கு கையசைத்து தனது நன்றியைத் தெரிவித்தார் விக்ரம்.
“உங்கள் அன்புக்கு என்றும் நான் அடிமை… முதல் கட்டப் படப்பிடிப்பு பேக்-அப் ஆனது,” என்று குறிப்பிட்டுள்ளார். இப்படத்தில் கிராமத்து கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விக்ரம்.
விக்ரம் நடித்துள்ள "தங்கலான்" படத்திப் படப்பிடிப்பு எப்போதோ முடிவடைந்துவிட்டது. ஆனால், வெளியீட்டுத் தேதியை இன்னும் அறிவிக்காமல் உள்ளார்கள். அப்படம் வெளிவருவதற்குள் "வீர தீர சூரன்" படப்பிடிப்பையே முடித்துவிடுவார்கள் போலிருக்கிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!