
சிம்பு மீது புகார் : அண்ணன், தம்பி பிரச்னை என்கிறார் ஐசரி கணேஷ்
படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசியதாவது : வேல்ஸ் பிலிம்ஸில் ஒரு நல்ல படம் எடுத்த திருப்தி இந்தப்படம் மூலம் கிடைத்துள்ளது. இயக்குநரையும், ஆதியையும் படம் பார்த்தவுடன் கூப்பிட்டுப் பாராட்டினேன். இடைவேளை வரை ஜாலியாக இருக்கும், இறுதியில் மிக முக்கியமான விசயத்தைத் தைரியமாகச் செய்துள்ளார்கள்.
ஆதிதான் இந்தப்படத்தின் கதையைக் கொண்டு வந்தார். கார்த்திக் இப்படி ஒரு படம் செய்வார் என நினைக்கவில்லை, அவரை அடுத்த படத்திற்கும் புக் செய்து விட்டேன், அடுத்த படமும் எங்களுக்குத்தான் செய்கிறார். ஆதி இசையமைப்பாளராக "அரண்மனை 4"ல் கலக்கியிருக்கிறார். அதேபோல் பிடி சாரிலும் கலக்கியிருப்பார். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக இப்படம் பிடிக்கும். என்றார்.
பின்னர் பத்திரிகையாளர்கள் சிம்புவுக்கு நடிக்க தடைவிதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தது பற்றி கேட்டபோது “சிம்பு "தக் லைப்" படத்தில் நடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. அவர் எங்களுடைய படத்தை (கொரோனா குமார்) முடித்து கொடுக்க வேண்டும் என்றுதான் சொல்கிறோம். அவரும் விரைவில் படம் நடித்துக் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார். அண்ணன் - தம்பிக்குள் நடக்கும் பிரச்னைதான் இது. சீக்கிரம் சுமுகமாக முடிந்து விடும்” என்றார்.
உங்கள் தயாரிப்பில் ரஜினி நடிக்கிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்த ஐசரி கணேஷ் "நான் ரஜினியை சந்தித்தது உண்மைதான். அவரும் எங்கள் தயாரிப்பில் படம் நடித்துத் தருவதாக சொல்லி இருக்கிறார். சீக்கிரம் நல்ல செய்தி வரும்" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!