
ஜுனியர் என்டிஆருக்காக விட்டுக் கொடுத்த கரண் ஜோஹர்
இந்தப் படத்திற்காக "டிராகன்" என்ற தலைப்பை வைக்க முடிவு செய்தனர். ஆனால், ஹிந்தியில் அத்தலைப்பு இயக்குனர் கரண் ஜோஹர் வசம் இருந்தது. ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் வெளிவந்த "பிரம்மாஸ்திரா" படத்திற்கு முதலில் "டிராகன்" என்ற தலைப்பை வைக்க முடிவு செய்து அப்பெயரை பதிவு செய்து வைத்திருந்தனர்.
தற்போது ஜுனியர் என்டிஆர் படத்திற்காக அத்தலைப்பை அவரிடம் கேட்டதும், எந்தவிதமான தொகையும் பெற்றுக் கொள்ளாமல் அத்தலைப்பை விட்டுக் கொடுத்துவிட்டார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கனாதன் நடிக்கும் படத்திற்கும் "டிராகன்" என்ற தலைப்பை அறிவித்துவிட்டார்கள். இத்தலைப்புக்கு ஜுனியர் என்டிஆர் படத்தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு தெரிவிக்குமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!