
இனி யு-டியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுக்க மாட்டேன் : சுசித்ரா திடீர் முடிவு
இந்த நிலையில் இனி யு-டியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுக்க மாட்டேன். எனது பேட்டிகளை தவறான கண்ணோட்டத்துடன் ஒளிபரப்புகிறார்கள் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது: நான் பல யு-டியூப் சேனல்களை பார்த்து வருகிறேன். அதில் தலைப்புகளில் என்னை பற்றி தவறாக கூறுகின்றார்கள். ஆனால் இது எல்லாம் எந்த ஆதாரத்தை வைத்து அவர்கள் பேசுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அதைப்பற்றி நான் யோசிக்க போவதுமில்லை. இனி எந்த ஒரு யு-டியூப் சேனலுக்கும் நான் பேட்டி கொடுக்கப் போவதில்லை. இனி எனது சொந்த சேனலில் மட்டுமே பேசுவேன். அதில் சினிமா விமர்சனங்களையும், தத்துவம் நிறைந்த விஷயங்களை பற்றிய வீடியோக்களை மட்டுமே நான் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!