
இன்ஸ்பெக்டர் ரிஷியை பாராட்டிய ரஜினி : ஜே.எஸ் நந்தினி நெகிழ்ச்சி
இந்த வெப் சீரிஸ் நன்றாகவே இருக்கிறது என தான் கேள்விப்பட்டதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளது இயக்குனர் நந்தினியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் வேட்டையன் படப்பிடிப்பு தளத்தில் அதில் பணியாற்றும் கலை இயக்குனர் கதிர் என்பவர் மூலமாக ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு நந்தினிக்கு கிடைத்தது. அப்போது இன்ஸ்பெக்டர் ரிஷி வெப் சீரிஸ் நன்றாக இருக்கிறது என தான் கேள்விப்பட்டதாக நந்தினியிடம் கூறியுள்ளார் ரஜினிகாந்த்.
படப்பிடிப்பில் ரஜினிகாந்த்துடன் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு நந்தினி பதிவிட்டுள்ளதாவது, “ரஜினியை நேரில் சந்தித்தபோது அவரது எளிமை, அன்பு, அவருடன் நிற்கும்போது அவருடைய ஆரா எல்லாமே நான் கற்பனை செய்து வைத்தது போலவே இருந்தது. இந்த நிகழ்வை எப்போதும் மனதில் வைத்து அசை போடுவேன். இந்த வாய்ப்பை உருவாக்கி தந்த கலை இயக்குனர் கதிருக்கு நன்றி. வேட்டையன் படம் வெற்றி பெற படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!