
சூர்யா 44வது படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகர்!
மே 12, 2024
Advertisement
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 44வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பென்ச் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர் என சமீபத்தில் அறிவித்தனர்.
இதன் படப்பிடிப்பு வருகின்ற ஜூன் 17ம் தேதி அன்று துவங்குகிறது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதில் கதாநாயகியாக நடிக்க பாலிவுட் நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!