
கருடன் படத்திற்கு வியாபார வட்டத்தில் வரவேற்பு
இப்படத்தின் டைட்டில் டீசர் ஒன்று ஜனவரி மாதம் வெளியானது. அதற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. 59 மில்லியன் பார்வைகளைக் கடந்தது அந்த டீசர். அதுவே படம் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியது.
தற்போது இப்படத்தின் வியாபாரமும் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக நடைபெற்றுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக வியாபார உரிமை மட்டும் சுமார் 15 கோடிக்கும் அதிகமாக விற்கப்பட்டுள்ளதாம். வெளிநாட்டு உரிமையும் குறிப்பிடும் விலைக்கே விற்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.
இந்த மாதத்தில் வெளியாக உள்ள படங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் இந்தப் படமும் ஒன்றாக இருக்கிறதாம். இப்படம் ஓடினால் சூரி கதையின் நாயகனாக நடித்து அடுத்து வெளிவர உள்ள "விடுதலை 2, கொட்டுக்காளி" ஆகிய படங்களின் வியாபாரமும் சிறப்பாக நடக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!