
யுவன் இசையில் கேங்ஸ் ஆப் கோதாவரி தெலுங்குப் படம்
அடுத்த வாரம் வெளியாக உள்ள "கேங்ஸ் ஆப் கோதாவரி" படத்திற்கு யுவன் தான் இசை. இப்படத்தின் டீசர் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்று படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி உள்ளது. இப்பாடலும் வித்தியாசமான பாடலாக அமைந்துள்ளது.
இன்று வெளிவந்துள்ள "ஸ்டார்" படத்தில் யுவனின் இசைக்கு ரசிகர்களின் பாராட்டுக்கள் அதிகம் கிடைத்து வருகிறது. அது போலவே, "கேங்ஸ் ஆப் கோதாவரி" தெலுங்குப் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என யுவனின் தெலுங்கு ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். தொடர்ந்து தெலுங்கிலும் யுவன் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது அவர்களது கருத்தாக உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!