
2024ன் முதல் வசூல் படமாக அரண்மனை 4
அதை கடந்த வாரம் மே 3ம் தேதி வெளிவந்த "அரண்மனை 4" படம் மாற்றியமைத்துள்ளது. இப்படம் தற்போது 50 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னணி ஹீரோ யாரும் நடிக்காமல், எப்போதோ ஒரு முறை வந்து தமிழில் நடிக்கும் தமன்னா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த படம்.
கொஞ்சம் நகைச்சுவை, நிறைய கிராபிக்ஸ், கூடவே சுவாரசியம் என விடுமுறை காலத்தில் மக்களை தியேட்டர்களுக்கு அழைத்து வந்த படமாக இப்படம் அமைந்தது. அடுத்து வர உள்ள படங்களும் இதே போல அமைந்தால் மட்டுமே நான்கு மாதமாக துவண்டு கிடந்த தமிழ்த் திரையுலகம் தழைக்கும் என்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!