
வெற்றி நடிக்கும் ஆண்மகன்
இந்த படத்தை இயக்குனர்கள் வசந்த் சாய், நந்தா பெரியசாமி ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மகா கந்தன் இயக்குகிறார். கிரசண்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே.எம்.சபி மற்றும் பாரூக் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். நவ்பல் ராஜா இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஆலிவர் டெனி ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குன் மகா கந்தன் கூறும்போது, ‛‛காமெடி கலந்த சென்டிமெண்ட் படமாக உருவாகிறது. கிராமத்து தந்தை, மகனுக்கு இடையிலான உறவையும், ஊடலையும் சொல்லும் படம். தந்தையாக பிரபுவும், மகனாக வெற்றியும் நடித்துள்ளனர். சென்னை, ராமநாதபுரம், தூத்துக்குடி, மரக்காணம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது” என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!