நடிகைகளின் பாராட்டு மழையில் மஞ்சும்மேல் பாய்ஸ்
மே 08, 2024
Advertisement
பிப்ரவரி மாதம் மலையாளத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் படம் வெளியானது. சர்வைவல் திரில்லராக நட்பை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்த படம் மலையாளம் மட்டுமல்லாது தமிழிலும் வரவேற்பு பெற்றது. 200 கோடிக்கு மேல் வசூலித்த முதல் மலையாள படம் என்கிற பெருமையையும் பெற்றது. சிதம்பரம் என்பவர் இயக்கிய இந்த படத்தில் ஓரிருவரை தவிர, இதில் நடித்த பலரும் கிட்டத்தட்ட புது முகங்களே. மலையாளம், தமிழ் என்று இரண்டு களங்களில் இரண்டு மொழிகளையும் உள்ளடக்கி இந்த படம் வெளியானதும் இந்த படத்தில் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்காமல் ஓடிடியில் பார்த்த பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுகளையும், ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பிரபல நடிகைகளான மிருணாள் தாக்கூர், ஷோபிதா துலிபாலா, ராஷி கன்னா ஆகியோர் இந்த படம் குறித்து தங்களது பாராட்டுகளை சோசியல் மீடியாவில் வெவ்வேறு விதமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!