மே 9ல் வெளியாகும் ராயன் முதல் பாடல்
மே 07, 2024
Advertisement
தனுஷ் தனது 50வது படமான "ராயன்" என்கிற படத்தை இயக்கி, நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த சில மாதங்களாக இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராயன் படத்திலிருந்து முதல் பாடல் வருகின்ற மே 9ம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர். ஜூன் மாதத்தில் இத்திரைப்படம் வெளியாகிறது என குறிப்பிட்டுள்ளனர். இப்பாடலில் 500க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் நடனமாடியுள்ளனர். பிரபு தேவா இந்த பாடலுக்கு நடனத்தை இயக்கியுள்ளார் என தகவல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!