
டைட்டானிக் கேப்டன் காலமானார்
கப்பல் ஆபத்தில் சிக்கியதும் அதை காப்பாற்ற போராடுவது, பயத்தில் இருக்கும் பயணிகளுக்கு தைரியம் அளிப்பது என்று அந்த கேரக்டர் உருவாக்கப்பட்டிருந்தது. கடைசியில் தனது தோல்வியால் மனசாட்சி உறுத்த தனது கேப்டன் கேபினில் நின்றபடி தண்ணீரில் முழ்கி உயிர் துறப்பார். அவரின் நேர்மையும், உழைப்பும் உண்மையான கேப்டனை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.
1975ம் ஆண்டு முதல் ஹாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கிய பெர்னார்ட் ஹில் கடந்த ஆண்டு வரை நடித்தார். "பாரவெர் யங்" என்பதுதான் அவர் கடைசியாக நடித்த படம். 50க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 40க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், 79 வயதான பெர்னார்ட் ஹில் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களும், ஹாலிவுட் திரை பிரபலஙகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!