அம்மாவுக்காக தான் சொன்னேன் - அதிதி
மே 03, 2024
Advertisement
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வருபவர் நடிகை அதிதி ராவ். அதேப்போல் நடிகர் சித்தார்த்தும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடிகர். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். சமீபத்தில் இவர்களுக்கு திருமணம் நடந்ததாக தகவல் பரவியது. பின்னர் அது திருமண நிச்சயதார்த்தம் என பொதுவெளியில் அதிதி அறிவித்தார்.
எளிய முறையில் நடந்த இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் பற்றி அதிதி கூறுகையில், ‛‛எங்கள் குடும்பத்தில் முக்கிய நிகழ்வு நடந்தால் எங்களின் 400 ஆண்டுகால பழமையான கோயிலுக்கு சென்று வழிபடுவோம். நிச்சயதார்த்திற்காக அங்கு சென்றோம். எனது திருமணம் பற்றி நிறைய வதந்திகள் அந்த சமயம் வந்ததால் என் அம்மாவுக்கு பலரும் போன் செய்து அதுபற்றி விசாரித்துக் கொண்டே இருந்தனர். இதை தெளிவுப்படுத்தும்படி என் அம்மா கூறினார். அதன்பின்னரே வலைதளத்தில் எங்களின் திருமண நிச்சயதார்த்தம் பற்றிய தகவலை போட்டோ உடன் பகிர்ந்தேன்"" என்றார் அதிதி.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!