
ஒரு நொடி இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்
மே 03, 2024
Advertisement
தமன்குமார் நாயகனாக நடித்த "ஒரு நொடி" படம் சமீபத்தில் வெளியாகி விமர்சகளிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு பெற்று திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை தனஞ்செயன் வெளியிட்டிருந்தார். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில் படத்தின் இயக்குனர் மணிவர்மனுக்கு தயாரிப்பாளர்கள் மதுரை அழகர் மூவிஸ் அழகர், மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ் கே.ஜி.ரத்திஷ் ஆகிய மூன்று பேரும் கார் பரிசளித்து அவரை உற்சாகப்படுத்தி உள்ளனர். வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகி இருந்த இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. நீண்ட காலமாக சினிமாவில் போராடிக் கொண்டிருக்கும் தமன்குமாருக்கு ஒரு சிறிய திருப்பத்தை தந்த படமாக அமைந்தது.
Tags
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!