
ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு
அந்த பதிவில், திருவண்ணாமலை எப்பொழுதுமே என்னுடைய இதயத்தில் ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறது. காரணம் என் வாழ்க்கையை மாற்றிய கோயில் இதுதான். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு ஏப்ரல் வரை ஒவ்வொரு மாதமும் நான் கிரிவலம் சென்றேன். இந்த கோயில் என்னுடைய ஆன்மிக தொடர்பை குறிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. நான் சொல்லும் ஒவ்வொரு கோயிலும் தெய்வீக அழைப்பாக உணர்கிறேன். இந்த பயணத்தால் உண்மையிலேயே நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!