
ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் நின்னு விளையாடு
இந்த படத்தை ராஜ் பீக்காக் மூவிஸ் சார்பில் எம்.கார்த்திக் தயாரிக்கிறார். மலையாள நடிகை நந்தனா ஆனந்த் ஹீரோயினாக நடிக்கிறார். இவர் மலையாளத்தில் "பரமனம்" உள்ளிட்ட சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர். மலையாள படம் ஒன்றில் நடித்து வரும் நந்தனா இந்த படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இவர்கள் தவிர தீபா சங்கர் பசங்க சிவக்குமார், சாவித்திரி உள்பட பலர் நடிக்கிறார்கள்.
படம் பற்றி அவர் கூறும்போது “சாமானியனின் வாழ்க்கையை காதலுடன் இணைத்து குடும்ப கதையாக சொல்லும் படம் இது. ஹீரோ காளை மாடு வளர்க்கிறார். அதன் மேல் பிரியத்துடன் இருக்கிறார். காதலா, காளைமாடா என்ற சூழலும் உருவாகிறது. சாதி மதங்களை இணைக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை பின்னணியாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது. அடுத்த மாதம் திரைக்கு வருகிறது” என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!