
நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி
நடிகர்கள் கமல், உதயநிதி, விஜய் ஆகியோர் தலா ஒரு கோடி வழங்கினர். சிவகார்த்திகேயன் 50 லட்சம் கொடுத்துள்ளார். இப்போது நடிகரும், சங்கத்தின் முன்னாள் துணை தலைவருமான நெப்போலியன் தன் பங்கிற்கு ரூ.1 கோடி நிதி அளித்துள்ளார். இதற்கான அறிவிப்பை நடிகர் சங்கம் வெளியிட்டுள்ளது.
மேலும் நடிகர் சங்கத்தின் கட்டடம் கட்டும் பணிகளுக்காக பொது மக்களிடமிருந்து நிதி பெறவில்லை. அதுபோன்று தகவல்கள் எதுவும் வந்தால் நம்ப வேண்டாம் என நடிகர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!