
அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார்
அந்த புகாரில், சமீபகாலமாக இளைஞர்கள் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த நேரத்தில் விக்ரம் நடித்திருக்கும் வீர தீர சூரன் படத்தின் போஸ்டரில் இரண்டு கையிலும் இரண்டு அரிவாள்களை வைத்துக் கொண்டு நிற்கிறார். இது போன்ற போஸ்டர்கள் இன்றைய இளைய தலைமுறையை வெகுவாக பாதிக்கும். அவர்கள் மனதில் வன்முறை எண்ணங்களை தூண்டிவிடும். எனவே இப்படி விக்ரம் அரிவாளுடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!