
பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம்
மா இன்டி பங்காரம் என இப்படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2006ல் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான பங்காரம் என்கிற படத்தின் டைட்டிலை மீண்டும் இந்தப்படத்திற்கு வைத்துள்ளார்கள். அதேசமயம் படத்தின் இயக்குனர் மற்றும் உடன் நடிப்பவர்கள் குறித்த விவரம் எதுவும் தற்போது வெளியாகவில்லை.
இந்தப் படம் குறித்து குறிப்பிட்டுள்ள சமந்தா, “தங்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக எல்லாமே மினுமினுக்க வேண்டியது இல்லை” என்று கூறியுள்ளார். மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்கிற பழமொழியை அப்படியே உல்டாவாக மாற்றி இந்த படத்தின் கரு குறித்து சமந்தா கூறியுள்ளார் என்று தெரிகிறது.
இந்த படத்தில் சமந்தா ஒரு புரட்சிப்பெண்ணாக நடிக்கிறார் என்பது இதுகுறித்து வெளியாகி உள்ள போஸ்டரில் அவர் இரட்டை குழல் துப்பாக்கியை வைத்துக் கொண்டிருப்பதை பார்க்கும்போதே புரிந்து கொள்ள முடிகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!