விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல்
Advertisement
Advertisement
விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல்
ஏப் 27, 2024
அ நிறம் | அளவு
Advertisement
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், யோகி பாபு, பிரேம்ஜி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் கோட். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான விசில் போடு சமீபத்தில் வெளியாகி வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்றது. இந்நிலையில், இரண்டாவது பாடல் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி வெளியாக உள்ளது. மேலும் கோட் படம் விநாயகர் சதுர்த்தியையொட்டி செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில், இப்படத்தின் டீசர், டிரைலர், இசைவிழா தேதிகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!