மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு
ஏப் 26, 2024
Advertisement
நடிப்பு, இயக்கம் என பயணித்து வருகிறார் தனுஷ். தனது 50வது படமான ராயன்-ல் நடித்து, இயக்கி முடித்துள்ளார். இதுதவிர நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகிறார். தனுஷின் 51வது படமான "குபேரா" படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார்.
இதில் அவருடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா, ஜிம் சார்ப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், திருப்பதி, மும்பை, பேங்காக் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு நேற்று முதல் மும்பையில் தொடங்கியதாக படக்குழு புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!