
அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
ஏப் 26, 2024
Advertisement
கடந்த ஆண்டில் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்து வெளிவந்த படம் " அயோத்தி " இப்படம் விமர்சன ரீதியாக வசூல் ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. முதல்படத்திலேயே கவனம் பெற்று மந்திர மூர்த்தியின் அடுத்த படம் குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் இவரின் அடுத்தபடம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. மந்திர மூர்த்தி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தை பிரபல பைனான்சியரும், கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் தயாரிக்கிறார் என அறிவித்துள்ளனர். நடிகர்கள் உள்ளிட்ட மற்ற விபரங்கள் வெளியாகவில்லை. முதல்படத்தை போலவே இந்தப்படமும் ஒரு உணர்வுப்பூர்வமான கதையில் தயாராகிறது.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!