
நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி
அஜித், ஷாலினி இருவரும் குடும்ப வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதாரணமாக திகழ்கிறார்கள். இவர்கள் இருவரும் ஆண்டுதோறும் தங்கள் திருமண நாளை கொண்டாடுவார்கள். இருவரும் வெவ்வேறு நாடுகளில் இருந்தாலும் ஏப்ரல் 24ம் தேதி ஒருவரை ஒருவர் சந்தித்து தங்கள் திருமண நாளை கொண்டாடுவார்கள்.
இந்த ஆண்டு இருவருமே சென்னையில் இருப்பதால் நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு சென்று அங்கு விருந்து அருந்தி கொண்டாடி உள்ளனர். ஓட்டல் ஊழியர்கள், அங்கு வந்தவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்கள். இந்த படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!