
விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம்
விஜய் கடந்த வாரம் ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்பியதும் நேராக ஓட்டுச்சாவடி சென்று லோக்சபா தேர்தலுக்கு ஓட்டளித்தார். அப்போது அவர் மிகவும் "டல்" ஆகக் காணப்பட்டார். அவரது இடது கையிலும் காயம் காணப்பட்டது. அப்போதே அது குறித்து மீடியாக்களில் பேசப்பட்டது. ரஷ்யாவில் நடந்த சண்டைக் காட்சிகளின் போது விஜய்க்கு காயம் ஏற்பட்டது என்ற தகவல் வெளியானது.
இந்நிலையில் நேற்று விஜய்யை "கில்லி" படத் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம், இயக்குனர் தரணி, வினியோகஸ்தர் சக்திவேலன் ஆகியோர் சந்தித்து மாலை அணிவித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். அந்த புகைப்படங்களில் விஜய்யின் இடது கையில் காயம் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
அதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் வெங்கட்பிரபுவை எக்ஸ் தளத்தில் "டேக்" செய்து “என்னய்யா பண்ணிட்டிருக்க, இப்படி அடிபட வச்சிருக்க,” என தங்களது வருத்தங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!