
அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ?
மணிரத்னம், சிலம்பரசன் "தக்லைப்" படப்பிடிப்பில் இருப்பதால் அவர்கள் ஓட்டு அளிக்கவில்லை என்கிறார்கள். அது போல "தி கோட்" படக்குழுவினர் ரஷ்யாவிலிருந்து திரும்பாத காரணத்தால் வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் யாருமே ஓட்டளிக்கவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
விஜய்க்கு மட்டும் நேற்று ஓட்டளிக்க வசதியாக விமான டிக்கெட்டை முன்பதிவு செய்தார்களாம். அதேசமயம் படக்குழுவைச் சேர்ந்த வேறு யாருக்கும் ஓட்டளிக்க வசதியாக ஏன் விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஒரு அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கும் விஜய், அவர் ஓட்டளித்தால் மட்டும் என்று நினைக்காமல் மற்றவர்களும் ஜனநாயக கடமை ஆற்ற வசதியாக தயாரிப்பாளரை வலியுறுத்தி இருக்க வேண்டுமல்லவா என்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!