
விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல்
விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளது போல விஷாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளார். 2026ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடப் போகதாகவும் கூறியிருக்கிறார். இதனிடையே, நேற்று நடைபெற்ற லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க ஓட்டுச்சாவடிக்கு சைக்கிள் ஓட்டிக் கொண்டு சென்றார்.
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது விஜய் சைக்கிளில் சென்று ஓட்டளித்தார். அது பரபரப்பாகப் பேசப்பட்டது. அது போலவே நேற்று விஜய்யைக் காப்பியடித்து விஷால் சைக்கிளில் சென்றார் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கிண்டலடித்துள்ளனர்.
விஜய் சைக்கிளில் சென்ற போது அவரது பின்னால் பலரும் சென்றனர். ஓட்டுச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், நேற்று விஷால் சென்ற போது அவரை வீடியோ எடுத்தவர் மட்டுமேதான் உடன் சென்றிருக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!