
ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள்
ஆனால், தெலுங்கில் "பாகுபலி, ஆர்ஆர்ஆர், புஷ்பா" ஆகிய படங்களுக்குப் பிறகு அங்குள்ள முன்னணி நடிகர்களின் படங்கள் ஹிந்தி உரிமை விலையில் அதிக வியாபாரத்தைப் பெறுகின்றன. சமீபத்தில் "புஷ்பா 2" படம் 200 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
அடுத்து பிரபாஸ் நடித்து வெளியாக உள்ள "கல்கி 2898 ஏடி" படம் 100 கோடிக்கும், ராம் சரண் நடித்துள்ள "கேம் சேஞ்சர்" படம் 75 கோடிக்கும், ஜுனியர் என்டிஆர் நடித்துள்ள "தேவரா" படம் 50 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அந்தப் படங்களுடன் ஒப்பிடும் போது தமிழில் ரஜினியின் "வேட்டையன்", கமல்ஹாசனின் "இந்தியன் 2", விஜய்யின் "தி கோட்", அஜித்தின் "விடாமுயற்சி", சூர்யாவின் "கங்குவா" ஆகியவை எந்த விலைக்கு போகப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!