
அரண்மனை 4 வெளியீடு தள்ளிவைப்பு
சில தினங்களுக்கு முன்பு படங்களை தள்ளி வைக்கச் சொல்கிறார்கள் என ரெட் ஜெயன்ட் நிறுவனம் மீது நடிகர் விஷால் குற்றம் சாட்டியிருந்தார். அவர் நடித்துள்ள "ரத்னம்" படம் ஏப்ரல் 26ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்திற்கும் என்ன நடக்கும் என்று தெரியாது என அவர் கூறியிருந்தார்.
"அரண்மனை 4" படத்தை கம்பெனி பெயர் இல்லாமல் ரெட் ஜெயன்ட் நிறுவனம்தான் வெளியிடுகிறது என்பது கோலிவுட் தகவல். நேற்று நடந்த "ரத்னம்" பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூட விஷாலிடம் நீங்கள்தான் தள்ளி வைக்கச் சொன்னீர்களா என்று கேட்ட போது பதறினார்.
“நான் அப்படி எதுவும் சொல்ல மாட்டேன், சிறிய படங்கள் கூட ஓட வேண்டும் என்பது எனது ஆசை. "அரண்மனை 4" தள்ளிப் போக வேறு ஏதோ காரணம் இருக்கலாம். சுந்தர் சி சார் எனது அண்ணன் போன்றவர்,” என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!