
ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...!
மணமகன் தருண் கார்த்திகேயன், இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனர் என்று தான் இதுவரை தகவல் வந்தது. உண்மையில் அவர் ஷங்கரின் உதவியாளரே அல்ல. அமெரிக்காவில் ஐடி படித்தவர். இவரது அப்பா அமெரிக்காவில் ஐடி கம்பெனி நடத்தி வருகிறார். சினிமாவில் பணியாற்ற ஆசை வர இந்தியா வந்துள்ளார். இயக்குனர் ஹரியும், தருணின் தந்தையும் நண்பர்கள். அந்த நட்பால் ஹரியிடம் ‛ரத்னம்" படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார் தருண். இந்த தகவலை பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார் தருண். மேலும் தருண், நடிகை நளினியின் உறவினரும் ஆவார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!