
மருதநாயகம் படத்தை ஹாலிவுட்டில் உருவாக்க கமல் திட்டம் : ஆஸ்கர் விருது இயக்குனருடன் ஆலோசனை
படத்தை ஹாலிவுட்டில் தயாரித்தால் உலக அளவிலான மார்கெட்டிங் சாத்தியம் என்பதை உணர்ந்த கமல் இதுகுறித்து தற்போது இந்தியா வந்துள்ள மெக்சிகோ இயக்குனர் அல்போன்சா குயூரனை தனது அலுவலத்திற்கு அழைத்து வந்து இது குறித்து ஆலோசனை நடத்தினார்.
அல்போன்சா புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர். தனது கிராவிட்டி, ரோமா படங்களுக்காக ஆஸ்கர் விருது பெற்றவர். இந்த சந்திப்பின் போது மருதநாயகம் படத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள், மேக்கிங் வீடியோவை அல்போன்சாவுக்கு காட்டி உள்ளார் கமல். இந்த சந்திப்பின் போது இயக்குனர் மணிரத்னம், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் சித்தார்த், நடிகை அதிதிராவ் ஆகியோர் உடன் இருந்தனர்.
இது குறித்து தனது சமூகவலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ள கமல், “நாங்கள் சினிமா பற்றி மட்டுமே பல மணி நேரம் பேசினோம். நான் மதிய உணவின் போது மாம்பழங்களை அவருக்கு அளித்தேன். அப்போது சித்தார்த், "அல்போன்சாவுக்கு பங்கனப்பள்ளி மாம்பழம் கிடைத்திருக்கிறது" என்று கிண்டல் செய்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!