
ரஜினி 171வது படத்தில் நாகார்ஜுனா?
நாகார்ஜுனா தமிழில் கடைசியாக 2016ல் வெளிவந்த "தோழா" படத்தில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் "குபேரா" படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். தெலுங்கில் வேறு எந்த புதிய படத்திலும் நடிக்காத நாகார்ஜுனா அடுத்த படமாக மீண்டும் ஒரு தமிழ்ப் படம், அதுவும் ரஜினிகாந்த் நடிக்கும் படம் என்பது ஆச்சரியமான தகவல்.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருந்தாலும் 30 வருடங்களுக்கு முன்பே தமிழில் டப்பிங் படங்களான "உதயம், இதயத்தைத் திருடாதே" ஆகிய படங்களின் மூலம் சூப்பர் ஹிட்களைக் கொடுத்தவர் நாகார்ஜுனா என்பது இன்றைய இளம் ரசிகர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ரஜினி 171வது படம் "ஜெயிலர், வேட்டையன்" படங்களைப் போலவே மற்ற மொழி நடிகர்கள் நடிக்க மல்டிஸ்டார் படமாக உருவாகும் எனத் தெரிகிறது. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!